அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூகனூர் ஸ்ரீஅகதீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி