முத்துமாரியம்மன் கோயிலில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிருஷ்ணாஜிபட்டினம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த திருவிழா கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி