புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த எருச்சி சிதம்பரவிடுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை (23). இவர் சிலட்டூரிலிருந்து சிதம்பரவிடுதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, தந்தானி சாலை அருகே, அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த விஷால் (19) மோதியதில் தங்கதுரைக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.