அறந்தாங்கி: பனை மரத்தில் மோதிய மினி வேன்.. தம்பதி பலி

அறந்தாங்கி அருகேயுள்ள சூரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலர் சிவராத்திரியை முன்னிட்டு நெடுங்குடி கைலாசநாதர் கோயிலுக்கு சென்றுவிட்டு இன்று காலை ஊர் திரும்பியுள்ளனர். அப்போது 
அவர்கள் வந்த மினி வேன் புறங்காடு பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி