புதுகை, ஆவுடையார்கோவில் அடுத்த மதகம் ஊராட்சிக்கு உட்பட்ட திராபிடுங்கி கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் இறப்பவர்களை தண்ணீருக்குள் இறங்கி எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. எனவே மயானத்திற்கு செல்ல பாதை அமைத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.