அறந்தாங்கி: மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி அருகே காடை இடையாத்துார் நாகம்மாள் கோயில் வைகாசி விசாக திரு விழாவை முன்னிட்டு 23வது ஆண்டாக மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரியமாடு. நடுமாடு, கரிச்சான் மாடு என்று 3 பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றிப்பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி