புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, நேற்று மணிகண்டன் (32) என்பவர் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிந்து, ஒரு யூனிட் வண்டல் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.