புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி கடைவீதி பகுதியில் இன்று(மார்ச் 27) காலை வீட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக வாகனத்தை தள்ளிச் சென்ற பெண்ணின் மீது இருசக்கர வாகனம் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.