எட்டியதள்ளி பகுதியில் விபத்து; 2 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம் எட்டியதள்ளி பகுதியில் நேற்று (பிப். 23) இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி