ஆவுடையார் கோவிலில் இருந்து விக்னேஸ்வர புரத்திற்கு நேற்று பைக்கில் சென்ற அரவிந்தன் (23) என்பவர், கல்லனேந்தல் அரசு கலைக்கல்லூரி அருகே சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் ஆவுடையார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.