புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் செட்டிவயல் விலை நிலம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக 5 கொண்டை கட்டுகளுடன் கூடிய அதிசய பனை மரம் ஒன்று காணப்படுகிறது. நுங்கு காய்க்கும் காலங்களில் அனைத்து கொண்டை கட்டுகளிலும் நுங்கு காய்த்து தொங்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அப்பகுதி மக்கள் இந்த பனை மரத்தை அதிசய பனை மரமாக வியப்புடன் பார்த்து வருகின்றனர்.