அறந்தாங்கி அருகே கட்டுமாவடி கடைவீதியில் கிழக்கு கடற்கரை சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் முகமது ரபி. நேற்று மாலை இந்த கடைக்கு மதுபோதையில் வந்த ஒருவர் திடீரென அடுப்பில் இருந்த கொதிக்கும் பாலை எடுத்து கடைக்குள் நின்றவர்கள் மீது ஊற்றினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியபடி ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், போதையில் இருந்தவர் கட்டுமாவடியை சேர்ந்த ஆரிப்கான் என்பது தெரியவந்தது.