அறந்தாங்கி: சாலையோரம் கிடந்த சடலம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்ட நாகுடி அருகே காராவயல் கிராமத்தில் சாலையோரம் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி