அறந்தாங்கியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில், 2 பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட புரோக்கர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.