இதுகுறித்து, அப்பகுதி பெண்கள் பலமுறை ஆலங்குடி தாசில்தார் மற்றும் வருவாய் துறையினரிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஆலங்காடு பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடகாடு போலீசார் மற்றும் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய் ஆய்வாளர் உறுதியளித்ததைத்தொடர்ந்து, பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.
இதனால், ஆலங்குடி – கீரமங்கலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.