புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த சரண்குமார் வினோத் ஆகியோர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அதே பகுதியில் மது அருந்திக் கொண்டு இருந்த ராஜேந்திரன், சசி, தவசி, செல்வா ஆகியோரோடு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில் ராஜேந்திரன் தரப்பினர் அரிவாள் மற்றும் செங்கல் போன்றவற்றைப் பயன்படுத்தித் தாக்கியதில் சரண்குமார் மற்றும் வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.