ஆலங்குடி அருகே வம்பன் 4 ரோடு, வம்பன் காலனியில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் அங்குள்ள ட்ரான்ஸ்பார்மர் மின்னோட்டத்தை நிறுத்திவிட்டு ட்ரான்ஸ்பார்மர் கோப்பர் வயர்களை திருடி சென்றுள்ளனர். இன்று காலையில் பொதுமக்கள் பார்க்கும் பொழுது ட்ரான்ஸ்பார்மர் கழட்டப்பட்டு அதில் உள்ள கோப்பர் கம்பிகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.