ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியரான இவர், அப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 3 மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச்சென்று, மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்த புகாரில் ஆலங்குடி மகளிர் போலீஸார் சக்திவேலை போக்ஸோ கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்நிலையில், சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ. சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.