புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வேங்கிடகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி அற்புத துறை (35). இவருக்கு திருமணம் ஆகி 8 வருடமான நிலையில் 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இதனை அடுத்து அவருக்கு அவர் தந்தையுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக நேற்று அந்தோணி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது மனைவி அளித்த புகாரில் ஆலங்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.