புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி பெண் பலி

புதுக்கோட்டை, மணவிடுதி அடுத்த கம்மங்காட்டைச் சேர்ந்த மாரியாயி (62) என்பவர், தனது வீட்டில் மின்விசிறியை ஆன் செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி