புதுகை: கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்

புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பாட்டு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண், வீட்டில் இருந்தபோது 5 அடி நீளமுள்ள பாம்பால் கடிக்கப்பட்டார். புஷ்பம், தன்னை கடித்த பாம்பை ஒரு பையில் போட்டுக்கொண்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு பாம்பைக் கண்ட மருத்துவர்களும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர். புஷ்பத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி