புதுகை: 3 மயில்கள் இறப்பு..பெண் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பணசக்காடு சந்திரசேகரன் என்பவரது தோட்டத்தில் நவம்பர் 8 அன்று 3 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. வனச்சரக அலுவலர் சதாசிவம் குழுவினர் நடத்திய விசாரணையில், செல்வி என்ற பெண் எலிகளை அழிக்க வைத்திருந்த பூச்சி மருந்து கலந்த நெல்மணிகளை மயில்கள் உண்டதால் இறந்தன என்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் நவம்பர் 9 அன்று செல்வியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி