புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிகுடியைச் சேர்ந்த காமாட்சி (78) என்பவர், தனது மகன் நாராயணசாமி 15 நாட்களுக்கு முன்பு இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று, அவர் தனது வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மருமகள் அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.