ஆலங்குடியைச் சேர்ந்த முத்துக்குமார்(45) வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில், மனைவியிடம் தான் அனுப்பிய பணத்தைக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம்(32), வீராசாமி(21) மற்றும் மேலும் இருவர் முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வீராசாமியை கைது செய்து, மற்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.