புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து குப்பக்குடிக்கு நேற்று (மே 29) பைக்கில் சென்ற விவசாயி செல்வம் (45) மீது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.