புதுக்கோட்டையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் ஆபாவணனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.