புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ரஜேஷ் குமார் (37), கொல்கத்தாவில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி பணியில் இருந்தபோது ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (மே 27) உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு குடும்பத்தினரையும் கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.