புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கல்லாலங்குடி பகுதியில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் வசிப்பிடங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.