ஆலங்குடி: மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல எதிர்ப்பு

ஆலங்குடி அருகே தோப்புக்கொல்லையை சேர்ந்தவர் பனச்சி என்கிற சின்னாத்தாள் (வயது 80). இவர் நேற்று முன்தினம் இயற்கை மரணம் அடைந்தார். இவரது உடலை தோப்புக்கொல்லை பொதுச்சாலையில் உறவினர்கள் எடுத்துச்சென்ற போது அப்பகுதியில் உள்ள சிலர் இந்த வழியாக உடலை எடுத்துச்செல்லக்கூடாது என மறித்து பிரச்சினை செய்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தாள் உறவினர்கள் உடலை சாலையில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி