ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பீரோல் வழங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் ஊராட்சி பொன்- பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு
டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் ஏற்பாட்டில் பீரோல் வழங்கப்பட்டது. காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி
ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் ஏற்பாட்டில் பொன்-பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பீரோல் வழங்கும் நிகழ்வு ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஸ்ரீ பிரசன்னா சரவணன் தலைமையில் பொன்- பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அப்பளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் புத்தகங்கள், பள்ளியின் முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் விதமாக அம்மன் கோவில் வீதி தொழிலதிபர் திருநாவுக்கரசு அவர்களின் நிதிப்பங்களிப்பில் ரூ. 8. 900 மதிப்பிலான பீரோல் வழங்கப்பட்டது.
அப்பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் அன்புச்செல்வன், பொருளாளர் கணேசன், துணைத் தலைவர் பாண்டியராஜன், நிர்வாகிகள் பிரவீன், மன்னாறு (எ)பாண்டி மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி