இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞரணி நிகழ்ச்சி என்பதால் திமுகவின் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இளையராஜா தான் நூலகத்தைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இரு அமைச்சர்களும் அவரை நூலகத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கப் பணித்தனர்.
இதனையடுத்து நூலகத்திற்குள் சென்று வைக்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் பார்வையிட்ட இரு அமைச்சர்களும் திமுகவினர் மற்றும் இளைஞர் அணியினரோடு இணைந்து தங்கள் வருகையை பதிவேட்டில் பதிவு செய்ததோடு நீண்ட நேரம் அங்கிருந்த நூல்களை வாசித்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.