கணவன் வேலை பார்த்து அனுப்பிய பணம் பேங்க் அக்கவுண்டில் இல்லாததை அறிந்து, மனைவியிடம் விசாரித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவர் வீட்டின் எதிரே உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தை இறந்த நிலையில் பெட்ஷீட்டில் மூடப்பட்டு கிடந்ததை அருகில் இருந்தவர்கள் தகவல் அறிந்து வல்லத்திரகோட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டதுடன், வீட்டின் மற்றொரு அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்த ஸ்ரீகாவின் உடலையும் மீட்டுள்ளனர். இரண்டு உடல்களையும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.