அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மேட்டில் மினி லாரியை டிரைவர் ஏற்றிய போது எதிர்பாராத விதமாக திடிரென மினி லாரியின் ஹைட்ராலிக் தானாக தூக்கிதாகவும் அப்போது அவ்வழியாக சென்ற மின்சார கம்பியில் ஹைட்ராலிக் உரசியதில் மினி லாரியில் இருந்த டிரைவர் ஜெயக்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் அளித்தனர் பின்னர் தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஜெயக்குமாரின் உடல் பிரோத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.