புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த சேர்வைக்காரன் பட்டியில் பாண்டி (40) என்பவர் சட்டவிரோத மதுபான பாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தபோது ஆலங்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 35 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.