புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வடகாடு பாப்ப மனையை சேர்ந்தவர் கவியரசன் (30). இவர் வடகாட்டில் உள்ள பெட்டி கடையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடகாடு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.