புதுகை, நத்தம்பண்ணை பாலன் நகரைச் சேர்ந்த புதுமைநாதன் என்பவர் வாண்டாங்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி 6 யூனிட் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த புதுகை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆறு யூனிட் ஜல்லிக்கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து வல்லத்ராகோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வல்லத்ராகோட்டை காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.