புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சண்முகநாதபுரம் கடையன் தோப்பை சேர்ந்த சுப்பையா (94) இவர் நேற்று வீட்டில் இருந்த நிலையில் திடீரென்று காணவில்லை. காரணம் ஏதும் தெரியாத நிலையில் அவரது பேரன் சரத்குமார் (33) ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஆலங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.