புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாண்டான்விடுதி தெற்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (65) என்பவர் விவசாயம் மற்றும் ஆடு வளர்த்து வருகிறார். அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, வீட்டின் அருகே இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட ஆடு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.