புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுனையக்காடு பகுதியில் இன்று திமுக வேட்பாளர் சிவ. வீ. மெய்யநாதன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பகுதி மக்களிடம் வாக்குறுதிகளை அளித்து, தங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருடன் இருந்தனர். மக்களிடையே அவருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.