புதுகையில் 21 பேர் மீது வழக்கு பதிவு!

புதுக்கோட்டை மாவட்டம் கூழையன்காட்டில் தனிநபர் கிணறுகளில் குப்பை கொட்டியதால் நிலத்தடி நீர் மாசடைந்ததாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி பேரூராட்சி ஒப்பந்ததாரர் இந்த செயலை செய்ததாகக் கூறப்படுகிறது. அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சுந்தரமூர்த்தி உட்பட 21 பேர் மீது ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி