புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் பந்துவகோட்டையைச் சேர்ந்த கலைச்செல்வன் (53) என்பவர் சாலையைக் கடக்க முயன்றபோது, பைக்கில் வந்த நபர் மோதியதில் படுகாயம் அடைந்தார். புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.