கறம்பக்குடி அடுத்த ரெகுநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த செல்லம்மாள் (75) என்பவர் ரெகுநாதபுரம் அரசு விடுதி அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரே பைக்கில் வந்த வீரமணி (38) மோதியதில் செல்லம்மாளுக்கு காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவரது மகன் அளித்த புகாரில் ரெகுநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.