புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "எங்களது பிரார்த்தனை வெற்றி பெற்றுவிட்டது. இந்து தர்மத்தை (சனாதனம்) எதிர்த்த திமுக தோல்வியடைந்து விட்டது. அதற்காக பிரார்த்திக்க வந்தேன்" என்று தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வராக ஜோசப் விஜய் வெற்றி பெற்றதற்கு அனைத்து மதத்தையும் ஏற்றுக் கொண்டது தான் முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.