புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குப்பகுடி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்த தமிழ் மாறன் (36) என்பவர், வெள்ளாளக்கொள்ளை வெள்ளக்குளம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.