புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, வேங்கடங்குளம் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவன் புவியரசன், தனியார் பேருந்தில் பள்ளிக்குச் சென்றபோது திடீரென பேருந்தில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.