ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (மே 20) வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.