ஆலங்குடி: மின்கம்பத்தில் மோதி விவசாயி பலி

வடகாடு ஊராட்சி சாத்தன்பட்டியைச் சேர்ந்த 60 வயதான விவசாயி குணசேகரன், நேற்று (ஜனவரி 9) மாலை கொத்தமங்கலம் செல்லும் வழியில், அம்புலி ஆற்றுப்பாலம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட குணசேகரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி