ஆலங்குடி: கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் பெரியநாயகிபுரம் சமுத்திரம் பகுதியில் உள்ள கிணற்றில் கணேசன் என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று தவறி விழுந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் ஆலங்குடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றுக்குள் இறங்கி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி