புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே வாழமங்கலம் கிளை சாலையில், முத்துக்குமார்(57) என்பவர் தனது 11 வயது பேரனுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அன்பு குமார்(25) ஓட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து முத்துக்குமாரின் மகள் மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.