அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தவளப்பள்ளம் ஆர்ச் அருகே நேற்று சபரி முத்து (59) என்பவர் நடந்து சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதிவிட்டு தப்பிச் சென்றார். இதில் சபரிமுத்து தலையில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி